கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... அர்ச்சகர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!



temple-priest-arrested-under-pocso-for-molesting-13-yea

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார் விஸ்வநாதன் (75). இவர் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் தேதி பாபநாசம் மெலட்டூர் பகுதியியை சேர்ந்த (13 )வயது சிறுமி தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்துள்ளார். சுவாமி தரிசனம் செய்த பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக சிறுமி மட்டும் தனியாக சென்றுள்ளார். அப்போது அந்த கோயிலின் அர்ச்சகர் விஸ்வநாதன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

tamilnaduஉண்டியலில் காணிக்கை செலுத்த சென்ற சிறுமியை வெகு நேரம் கழித்தும் காணவில்லை என்பதால் தேடி சென்று பார்த்த பெற்றோர் அங்கே சிறுமி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியிடம் நடந்தை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அர்ச்சகர் விஸ்வநாதனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சிறுமிக்கு கோவில் அர்ச்சகராளே நடந்த இக்கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!