அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சாலையோரத்தில் கிடந்த சடலம்... மார்த்தாண்டம் தனியார் பள்ளி ஆசிரியர் மர்ம மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை.!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சாலை ஓரத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசிங்(52). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பட்டுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் வழியில் ஆசிரியர் பிணமாக கடந்து இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆசிரியர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஓவிய ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.