கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை: மனைவி உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!

கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை: மனைவி உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!


Murder of husband who condemned fake love

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை வெட்டிக்கொன்ற வழக்கில் மனைவி உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதலை கண்டித்ததால் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. மேலும் 4 உறவினர்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் அவினாபேரி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (36). கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜானகி. ஜானகிக்கு, வல்லநாட்டை சேர்ந்த சக்திவேல் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பாக்கியராஜ் இல்லாத நேரத்தில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளத்தொடர்பை அறிந்த பாக்கியராஜ் தனது மனைவியை கண்டித்தார். பின்னர் ஒரு நாள் சக்திவேலும், ஜானகியும் ஒன்றாக இருந்த போது கையும் களவுமாக பிடித்த பாக்கியராஜ், அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதன் காரணமாக பாக்கியராஜூக்கும், சக்திவேலுக்கும், இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ,கடந்த 2016 ஆண்டில் பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது. சக்திவேல் மற்றும் அவருடைய நண்பர் வல்லநாட்டை சேர்ந்த ராஜா (32) ஆகிய இருவரும் சேர்ந்து பாக்கியராஜை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலைக்குபாக்கியராஜின் மனைவி ஜானகி, ஜானகியின் தந்தை சுடலை (56), அவரது தாய் அந்தோணியம்மாள் (52), தம்பி அந்தோணி ராஜ் (30), தாய்மாமா மாணிக்கம் (55) ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரவி, சிவந்திப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குமாரவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் சக்திவேல், ராஜா, ஜானகி, மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நெல்லை 3 வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜா, ஜானகி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.