கஞ்சா போதையால் பறி போன உயிர்.! ரத்தவெள்ளத்துடன் இருந்த சடலம்..!murder-in-pondicherry

புதுச்சேரி மாநிலத்தில் சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமரன் இவருக்கு வயது 57. இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காஞ்சனா (வயது 42). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். 

இந்நிலையில், முத்துக்குமரன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வெள்ளாழர் வீதி பேங்க் ஆப் பரோடா அருகில் உள்ள வாய்க்காலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இவரை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் நாகராஜ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

 

tamilnadu

மேலும், சம்பவ இடத்தில் இருந்த கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர். அந்த பதிவில் நள்ளிரவு நேரத்தில், 3 வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த முத்துகுமரிடம் பணம் உள்ளதா என்று பாக்கெட்டில் கைவிட்டு பார்க்கிறார்கள். 

சட்டென, தூக்கம் களைந்து எழுந்த முத்துகுமரன் அந்த வாலிபர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அந்த 3 பேரும் முத்துகுமாரனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்கள். அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்கள். முத்துகுமரன் அங்கே மயங்கி விழுந்து கிடக்கும் காட்சிகள் அதில் இருந்துள்ளது.

இந்த கொலையில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் 3 தனிப்படை வைத்து தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, அந்த மூன்று குற்றவாளிகளும் கஞ்சா போதையில் தான், காவலாளியை அடித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 

இந்த கஞ்சா கும்பல், முத்துகுமாரனை கொடூரமாக அடித்து கொலை செய்யும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மக்களிடையே பெரும் பீதியை அளித்துள்ளது.