சவ ஊர்வலத்தில் பூ வீசுவதில் தகராறு! மீண்டும் நடந்த தகராறில் ஏற்பட்ட மரணம்!
சவ ஊர்வலத்தில் பூ வீசுவதில் தகராறு! மீண்டும் நடந்த தகராறில் ஏற்பட்ட மரணம்!

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இவரின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் பூ வீசுவதில் சரவணன் என்பவருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இறுதி ஊர்வலத்தில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரவணனை எழுப்பி, இறுதி ஊர்வலத்தில் நடந்த பிரச்னை தொடர்பாக ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் பேசியுள்ளனர். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை சரவணனை குத்தியுள்ளார்.
கத்தி குத்தால் ரத்த வெள்ளத்தில் துடித்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.ஆனால் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.