தமிழகம்

மொட்டை மாடியில் செல்ஃபி எடுக்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவி.! கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்.!

Summary:

Mottai madiyil selfie eaduka sinra manavi

கரூர் மாவட்டம் எல்ஜிபி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன்-உமாதேவி தம்பதியினர். இவர்களுக்கு விஷாலினி என்ற 15 வயது நிரம்பிய மகள் உள்ளார். விஷாலினி புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஆனால் தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா ஊரடங்கு காரணமாக விஷாலினி வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். ஒரு சேஞ்சுக்கு அதே பகுதியில் அப்பார்ட்மெண்ட்யில் ஐந்தாவது மாடியில் குடியிருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார் விஷாலினி.

அப்போது அங்கு உள்ள மொட்டை மாடியின் சுவற்றில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதனை அடுத்து சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அந்த மருத்துவமனையில் இருந்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement