தமிழகம்

மீண்டும் ஒரு அபிராமி: பெற்ற சிசுவை இப்படியா செய்வது? அதிர்ச்சி சம்பவம்!.

Summary:

mother killed her child for husband and wife problem


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்த இளம்பெண் ரம்யா என்பவருக்கும், பக்கத்துக்கு ஊரான கொளக்குடியை சேர்ந்த தங்கத்துரை என்பவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இந்த நிலையில் இருவரும் அதே பகுதியில் கூலி விவசாய வேளை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி தம்பதிகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தன் பெண் குழந்தையுடன் அவரது தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து  கதவை பூட்டிக்கொண்டு தன் மகளை காலால் மிதித்து கொன்றுள்ளார்.

3 வயது குழந்தையை காலால் மிதித்தே கொன்ற கொடூர தாயார்: வெளியான பகீர் காரணம்

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குளித்தலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த குளித்தலை காவல்துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது குழந்தை  இறந்த நிலையில் இருந்துள்ளது.

தாய் ரம்யா ஓராமாக அமர்ந்திருந்துள்ளார். குழந்தையை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் ரம்யாவை கைது விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement