"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
தனது 3 குழந்தைகளையும் வாய்க்காலில் வீசி கொடூரமாக கொன்ற தாய்!! வாக்குமூலத்தால் கொலைநடுங்கிப்போன போலீசார்!!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சத்தியவதி இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் அஞ்சியா,நந்தினி தர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மணிகண்டன் மற்றும் சத்தியவதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த சத்யவதி நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள வெள்ள ராஜன் என்ற வாய்க்கால் பகுதியில் குழந்தைகளுடன் அமர்ந்து இருந்துள்ளார் பின்னர் இரவானதும் கணவன் மீது இருந்த கோபத்தில் தனது மூன்று குழந்தைகளையும் ஒவ்வொருவராக வாய்க்காலில் தூக்கி வீசியுள்ளார். இதனைத்தொடர்ந்து விடியும் வரை அங்கேயே அமர்ந்து இருந்த சத்தியவதி பின்பு தன் குழந்தைகளை கொலை செய்து விட்டதாக நேற்று காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாய்க்கால் பகுதியில் மதியம் வரை தேடிய நிலையில் மூன்று குழந்தைகளும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சத்தியவதி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.