மகன் இறந்த சோகத்தில் உயிரிழந்த மகனின் உடலை கட்டிப்பிடித்தப்படி உயிரிழந்த தாய்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!

Mother died after embracing her son died


Mother died after embracing her son died

மகன் உயிர் இழந்த சோகத்தில் அவரது தாயாரும் உயிர் இழந்த சோகம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவர் தாமஸ். 45 வயதாகும் தாமஸ் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவு தூங்கச்சென்ற தமாஷ் இரவு 1 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்கள் தாமஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து தாமஸின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இறந்துபோன மகனின் உடலை பார்த்து அவரது தாய் காஞ்சனா கதறி அழுதுள்ளார். இரவு முழுதும் மகனின் உடல் அருகிலையே இருந்த காஞ்சனா அடுத்த நாளும் மகனின் அருகில் இருந்து அழுதபடியே இருந்துள்ளார்.

Mysteries

இந்நிலையில், மகனை கட்டி அணைத்தவாறு காஞ்சனா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவர் எழுந்திரிக்கவில்லை. இதனால் காஞ்சனாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளார். அங்கு அவரை சோதனை செய்தபோது அவரும் உயிர் இழந்தது தெரியவந்தது.

மகன் மீது கொண்ட அதீத பாசத்தால் அவர் உயிர் இழந்ததை தங்க முடியாமல் அவரது தாயும் உயிர் இழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.