மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
கணவன் இறந்து ஒருவாரத்திற்குள் மனைவி, மகளுக்கு ஏற்பட்ட சோகம்.! துணி துவைக்க போன இடத்தில் நடந்த சம்பவம்.!
செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி மூன்று பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது பத்து வயது மகள் சுபாஷினி மற்றும் உறவினர் மகள் தேவதர்ஷினியுடன் அருகில் இருந்த ஏரிக்கு துணி துவைக்க சென்றுள்ளார்.
துணி துவைக்க சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் மூவரையும் தேடி ஏரிக்கு சென்றுள்ளனர். துணி துவைக்க எடுத்து சென்ற பொருட்கள் அனைத்தும் கரையில் இருந்த நிலையில் இவர்கள் மூவரை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏரியில் இறங்கி தேடியுள்ளனர்.
அப்போது மூன்று பேரும் ஒன்றன் பின் ஒன்றாக சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிர் இழந்த ராஜேஸ்வரியின் கணவரும் கடந்த வாரம் இதேபோன்று உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துணி துவைக்க சென்ற மூவரும் ஏரியில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.