தமிழகம்

கணவர் சொன்ன ஒத்த வார்த்தை.! கை குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.!

Summary:

இளம் பெண் ஒருவர் நான்கு மாத குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேல்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன். 27 வயது நிரம்பிய தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குருதேவி என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் இந்த தம்பதிக்கு நான்கு மாத ஆண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த குருதேவி திடீரென குழந்தையின் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீயை வைத்து பற்ற வைத்து கொண்டுள்ளார். இதனையடுத்து குழந்தையும், குருதேவியும் அலறல் சத்தம் போட்டுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இரண்டு பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ தினத்தன்று காலையில் பொன்முருகன் வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு மதிய சாப்பாட்டை சீக்கிரமாக ரெடி பண்ணு என்று சொல்லியியுள்ளார். ஆனால் கோபத்துடன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் குழந்தையுடன் தற்கொலை கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement