ஒரு வயது மகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தாய்!. துடி துடித்து கதறும் கணவன்!.

ஒரு வயது மகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தாய்!. துடி துடித்து கதறும் கணவன்!.


mom-killed-her-son-and-she-gets-suicide


சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்குமார்(36). அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், சேத்துபட்டில் உள்ள இந்திய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர் ரக்சிதா என்ற பெண்ணை மணந்து இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது. நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற தினேஷ்குமார், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கதவு உள்புறமாக பூட்டி இருந்ததால் கதவை தட்டியுள்ளார் தினேஷ்குமார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரக்சிதா தூக்கில் தொங்கியுள்ளார். அதனை பார்த்த தினேஷ்குமார் அலறல் சத்தம் போட்டுள்ளார்.

suicide

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் அவர்களின் ஆண் குழந்தையும் பிணமாக கிடந்துள்ளான்.

மனைவி, குழந்தை இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு தினேஷ்குமார் கதறி அழுதார். ரக்சிதா, தனது குழந்தையை கொன்றுவிட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தகவலறிந்துவந்ந்த காவல்துறையினர், தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.