தமிழகம்

கணவனின் முதலாமாண்டு நினைவு நாளில் மனைவி எடுத்த விபரீத முடிவு.! பரிதாபமாக போன 1½ வயது குழந்தையின் உயிர்.!

Summary:

திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நிஷா. கார்த்

திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நிஷா. கார்த்திக் கடந்த ஆண்டு தீ விபத்தில் இறந்து விட்டார். இந்தநிலையில் கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது 1½ வயது ஆண் குழந்தையுடன் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் கணவரது முதலாவது நினைவு தினத்தையொட்டி நிஷா சோகமாக இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நிஷா கத்தியால் அவரது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்தநிலையில் நிஷாவின் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது மகளின் நிலையை பார்த்தும், பேரன் சடலமாக கிடப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நிஷாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உஷா மீது கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கணவரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது நினைவு நாளில் உஷா எடுத்த விபரீத முடிவால் தற்போது அவரது குழந்தையையும் இழந்துள்ளார்.


Advertisement