தமிழகம்

குழந்தைகளை ஸ்கூட்டரில் அழைத்துச்சென்ற தாய்! விபத்தில் தாய், மகள் பலி! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 வயது சிறுவன்!

Summary:

mom and daughter died in accident


சென்னை திரிசூலம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு ஷிவானி என்ற 5 வயது மகளும் தீபக் என்ற 2 வயது மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று சுதா தனது இரண்டு குழந்தைகளை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு ஸ்கூட்டரில் அழைத்துச்சென்றுள்ளார்.


அப்போது மடிப்பாக்கம் அருகே சென்றபோது, தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், சுதா‌ மற்றும் அவரது 3 வயது மகள் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவரது 2 வயது மகன் தீபக் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இதனையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


Advertisement