தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி.! எங்கு தெரியுமா.?

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி.! எங்கு தெரியுமா.?


modi-wear-vesti-and-shirt-in-madurai-meenakshi-amman-te

மதுரையில் நாளை பாஜக - அதிமுக கூட்டணியின் 36 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக மதுரை வந்துள்ளார் பிரதமர் மோடி. இந்தநிலையில் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு  கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்ய தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி,சட்டையில் பிரதமர் மோடி வருகை வந்தார்.


சீன அதிபர் தமிழகத்திற்கு வருகை தந்த போது மாமல்லபுரத்தில், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி,சட்டையுடன் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் வருகையை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.