இந்த மனசு தான் சார் கடவுள்.! சிறையில் வாடும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு.!

இந்த மனசு தான் சார் கடவுள்.! சிறையில் வாடும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு.!


MK Stalin's letter to the President to release 7 people

தேர்தல் பிரசாரத்துக்காக 1991-ம் தமிழகம் வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இவர்கள் 7 பேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.  இந்தநிலையில் இந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

MK Stalin

அந்த கடிதத்தில், 7 பேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றம் கொரோனா தொற்று பரவலை  தவிர்க்கும் வகையில் கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தி உள்ளது. எனவே 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என 2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.