ஸ்பெஷல் மீட்டிங்.! பிரபல இயக்குனர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.! வைரலாகும் புகைப்படம்!!

ஸ்பெஷல் மீட்டிங்.! பிரபல இயக்குனர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.! வைரலாகும் புகைப்படம்!!


mk-stalin-visit-to-director-selvaragavan-house

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி, பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான இவர், தற்போது தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். 

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் திடீரென தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அவரைக் கண்டதும் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கிப் போயுள்ளனர். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலினுடன் தங்களது குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மாண்புமிகு முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அது ஸ்பெஷலான சந்திப்பாக இருந்தது என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.