அடி தூள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.! குஷியில் தமிழக மக்கள்.!
அடி தூள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.! குஷியில் தமிழக மக்கள்.!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பெண்கள் நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம் செய்துகொள்ள ஆணையிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பேருந்து போக்குவரத்து தொடங்கியதும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கியமாமணி என்ற விருது’ உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மேலும், இரண்டாவது தவணையாக நிவாரணத் தொகை ரூபாய் 2000 , 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும். திருவாரூரில் ரூ.30 கொகுடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ரூ.70 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.