கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்.!

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்.!



mk stalin meet governor

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்தநிலையில்  தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. 

அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

MK Stalin

இதனையடுத்து, சட்டமன்ற தி.மு.க. தலைவராக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்து கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.