காணாமல் போன பெண்மணி... வனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட கொடூரம்.. நடந்தது என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!

காணாமல் போன பெண்மணி... வனப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட கொடூரம்.. நடந்தது என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!Missing women found near thambaram

காணாமல் போன பெண்மணி வனப்பகுதியிலிருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தாம்பரத்தை சேர்ந்தவர் ஏஞ்சலின். இவரின் தாயார் எஸ்தர் (வயது 55). இவர் மாயமான நிலையில், சேலையூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் மதுரபாக்கம் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல்துறை தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

thambaram

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண்மணி 55 வயதுடைய எஸ்தர் என்பது உறுதியாகியுள்ளது. பின் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.