காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!


Missing old woman recovered as dead body.. Shocked relatives..!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கங்கம்மாள்(80). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கங்கம்மாள் திடீரென்று வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கங்கம்மாள் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கங்கம்மாளை பல இடங்களில் தேடி அழைந்துள்ளனர். இதனையடுத்து அவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

old lady

இந்நிலையில் பெரியகண்மாயில் இறந்த நிலையில் ஒரு சடலம் மிதந்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இறந்து சடலமாக கிடப்பது யார் என்று நடத்திய விசாரணையில் அது கங்கம்மாளாக இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகப்பட்டு கங்கம்மாள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த சடலத்தை பார்த்ததில் அது கங்கம்மாள் சடலம் என்று  உறவினர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.