சிறு வணிகர்களின் தலையில் விழுந்த பேரிடி - மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி.!

சிறு வணிகர்களின் தலையில் விழுந்த பேரிடி - மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி.!



Minister Udhayanidhi Stalin request to Central Govt 

 

எரிவாயு விற்பனை நிறுவனங்கள், மாதத்தில் முதல் தேதியான இன்று சமையல் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் விலையை அறிவித்தது. இதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி தொடருகிறது. 

ஆனால், கடந்த மாதத்தில் ரூ.1695 க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலை, இம்மாதம் ரூ.203 விலை உயர்த்தப்பட்டு ரூ.1898-க்கு கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், "வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும். 

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த  விலையேற்றம் அமைந்துள்ளது. 

இந்த விலையேற்றத்தை  ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.