#Breaking: திருப்பதியில் நிக்கிறான், திருச்செந்தூரில் கத்துறான் - அமைச்சர் சேகர் பாபு பதில்.. அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்..!



Minister Sekar Babu on Tiruchendur Peoples Crowd 

 

மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள், தங்களை திறந்தாவது விடுங்கள் வீட்டுக்கு செல்கிறோம் என கதற, அமைச்சரோ திருப்பதியில் நிக்கிறான், திருச்செந்தூரில் கத்துறான் என்ற பாணியில் பதில் சொல்லிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர். இதனால் அவர்கள் கோவிலுக்கு அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின் படிப்படியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ஆவேசம்.. பலமணிநேரம் அடைத்து வைக்கப்பட்டதால் கொந்தளிப்பு.!

இன்று தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர், திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மணல் அரிப்பை ஆய்வு செய்தனர். மேலும், மணல் திட்டுகளை பாதுகாக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

பக்தர்கள் தவிப்பு

இதனிடையே, மண்டபத்தில் காலை முதல் 6 மணிநேரத்திற்கு மேலாக பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பசியால் வாடுவதாகவும், சில குழந்தைகள் அழுவதாகவும், தங்களை திறந்துவிட்டால் வெளியிலாவது சென்றுவிடுவோம். உணவுக்கு கூட ஏற்பாடுகள் செய்யாமல் தவிக்க வைக்கிறார்கள் என ஆதங்க குரல் எழுப்பினர்.

மணல் அரிப்பு ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மற்றும் எம்.பி வருவதை பார்த்து பக்தர்கள் குரல் கொடுக்க, அங்கிருந்தவர்கள் விபரத்தை தெரிவித்தனர்.

அமைச்சர் பேச்சு

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தியபோது, அமைச்சரிடம் கனிமொழி விபரம் குறித்து கேட்டறிய முற்பட்டார். அப்போது பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "திருப்பதிக்கு போனால் 24 மணிநேரம் நிற்பான், இங்க கத்துறான். சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால், நிற்கத்தான் வேண்டும்" என பேசியபடி சென்றார்.

திமுக எம்.பி கனிமொழி மக்களை நோக்கிச் சென்ற நிலையில், அவரிடம் நேரடியாக விளக்கம் அளித்த சேகர் பாபு, தன்னுடன் அழைத்துச் சென்றார். 


 

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ஆவேசம்.. பலமணிநேரம் அடைத்து வைக்கப்பட்டதால் கொந்தளிப்பு.!