தமிழகம்

கஜா: 64 வயதில் ஓயாமல் உழைக்கும் அமைச்சர் ஓ. எஸ்.மணியன்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

Summary:

Minister os manian in gaja rescue

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு குழுவினருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

'கஜா' புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிக்கி தஞ்சாவூரில் அதிகபட்சமாக 11 பேர் உயிரிழந்தனர். நாகை மற்றும் புதுக்கோட்டையில் தலா 9 பேர் புயல் தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும், திண்டுக்கல்லில் ஒருவர் என, இதுவரை மொத்தம் 30 பேர் உயிரிழந்தாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினர் ஆங்காங்கே மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகின்றனர். தங்களால் முயன்ற அளவில் சாலைகளை சீரமைப்பதிலும், மின்சார கம்பிகளை பழுது பார்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மீட்புப்பணிகளை அந்தந்த பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நேரடியாக செயல்படுத்தி வருகின்றனர்.

O.S Manian

இதில் குறிப்பாக வேதாரண்யத்தைச் சேர்ந்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சொந்த ஊர் மக்களுக்காக களத்தில் இறங்கி மீட்பு குழுவினருடன் சேர்ந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். 64 வயதான இவர் எந்த சிரமமும் பாராமல் புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக டூ வீலரில் சென்று மீட்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொறுப்புணர்வு மெய்சிலிர்க்க வைப்பதாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர் வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.


Advertisement