மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்! இறுதியில் மூன்றாவது மனைவியால் நேர்ந்த சோகம்!

மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்! இறுதியில் மூன்றாவது மனைவியால் நேர்ந்த சோகம்!


Men married three girls and suicide in pondichery

தருமபுரி மாவட்டத்தில் பிரபலமான அழகுநிலையம் ஒன்றில் வேலைபார்த்துவந்தவர் ராஜா. இவருக்கு அவரது தாய் மாமன் மகள் சந்தியா எனபவருடன் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவுக்கு திடீரென தருமபுரியில் இருந்து தேனிக்கு வேலை மாற்றப்பட்டுள்ளது.

இதனால் தேனிக்கு வேலைக்கு சென்ற ராஜாவுக்கு அங்கிருந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைந்து இரண்டாவதாக அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் ராஜா. இந்நிலையில், ஆதரவற்ற இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட ராஜா அவரையும் மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.

Crime

இப்படி மூன்று மனைவிகளுடன் மாறி மாறி உல்லாசம் அனுபவித்து வந்த ராஜாவுக்கு திடீரென பாண்டிச்சேரிக்கு வேலை மாற்றப்பட்டுள்ளது. இதனால் தனது மூன்றாவது மனைவியை பாண்டிச்சேரி அழைத்துள்ளார் ராஜா. ஆனால், அவர் அங்கு வர மறுத்ததால் மனமுடைந்த ராஜா தற்கொலை செய்துகொண்டார்.

ராஜா இறந்த தகவல் மூன்று மனைவிக்கும் தெரியவே மூவரும் பாண்டிச்சேரிக்கு வந்து அவர் எனது கணவர் என கூற போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.