சும்மா என்றால் என்ன..? சும்மா என்ற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தங்களா..? சுவாரசிய தகவல்..

சும்மா என்றால் என்ன..? சும்மா என்ற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தங்களா..? சுவாரசிய தகவல்..


meaning-of-summa-in-tamil-language

நாம் அடிக்கடி பயன்படுத்தும் சும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள் உள்ளது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

உலக மொழிகளில் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்று நம் தமிழ் மொழி.. செம்மொழியான நம் தமிழ் மொழிக்கு மற்ற மொழிகளில் இல்லாத பல்வேறு சிறப்புகள் உண்டு. பயன்படுத்தும் வார்த்தைகள், உச்சரிப்பு, இலக்கணம் என நமது தமிழ் மொழிக்கு நிகர் நம் தமிழ் மொழியே.

இத்தனை சிறப்பு நிறைந்த நமது தமிழ் மொழியில் நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று சும்மா. சும்மா என்றால் என்ன.? அதற்கு அர்த்தம் என்ன? அதன் சிறப்பு என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம் வாங்க.

*சும்மா*... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

 அது சரி சும்மா என்றால் என்ன? 

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா. 

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இது.

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - சும்மா (அமைதியாக) இருங்கள் – Quiet

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் சும்மா இருக்கின்றேன் - Leisurely

3. உண்மையில் - சும்மா சொல்லக்கூடாது அருமை - in fact

4. சும்மா ( இலவசமாக) கிடைக்காது - Free of cost

5. பொய் - சும்மா கதை அளக்காதே - Lie

6. உபயோகமற்று - சும்மா தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - Without use

7. அடிக்கடி - சும்மா சும்மா சீண்டுகின்றான் இவன் - Very often

8. எப்போதும் - இவன் இப்படித்தான் சும்மா சொல்லுவான் - Always

9. தற்செயலாக - ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன் - Just

10. காலி - இந்த பெட்டி சும்மா தான் இருக்கின்றது - Empty

11. மறுபடியும் - சொன்னதையே சும்மா சொல்லாதே - Repeat

12. ஒன்றுமில்லாமல் - சும்மா ( வெறும்கையோடு) போகக் கூடாது - Bare

13. சோம்பேறித்தனமாக - சும்மா தான் இருக்கின்றோம் - Lazily

14. நான் வெட்டியாக (சும்மா) ஏதாவது உளறுவேன் - idle

15. விளையாட்டிற்கு - எல்லாமே  சும்மா தான் சொன்னேன் - Just for fun

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல். நாம்  பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்..  பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது சும்மா இல்லை

சும்மா வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு சும்மா பிடித்து இருந்தால் சும்மா ஒரு Forward பண்ணுங்கள்..

Credits: WhatsApp Share