ஜெர்மனியில் வித்துவான்களுக்கு தனி மவுசாம்., 26 பேரிடம் ரூ. 54 இலட்சம் நாமம் போட்ட பிராடு.. பகீர் சம்பவம்..!
ஜெர்மனியில் வித்துவான்களுக்கு தனி மவுசாம்., 26 பேரிடம் ரூ. 54 இலட்சம் நாமம் போட்ட பிராடு.. பகீர் சம்பவம்..!

26 பேரிடம் ரூ.54 இலட்சம் ஏமாற்றிய புரோகிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூர், பெருமாள் கோவில் மேலத்தெருவில் வசித்து வருபவர் பூரணசந்திரன். இவர் புரோகிதர் ஆவார். இந்நிலையில், இவர் தனது நண்பர்களிடம் ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்துவான்களுக்கு வேலை இருப்பதாக கூறி ஆசையை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாறாக சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 26-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களிடம் நபருக்கு ரூ.2 இலட்சம் என்ற பெயரில் மொத்தமாக ரூ.54 இலட்சம் பணம் பெற்றுள்ளார். பணம் பெற்றுக்கொண்ட பூரணசந்திரன் 26 பேரில் 15 நபர்களை வெளிநாடு அனுப்புவதாக சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இவர்களை விமான நிலையத்தில் தவிக்கவிட்டு பூரணசந்திரன் எஸ்கேப் ஆகியுள்ளார்.
15 பேரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்தியுள்ளார். மேலும், அவர்களுக்கு போலி விசா வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்கள் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி பூந்தமல்லியில் தலைமறைவாக இருந்த பூரணசந்திரனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.