திருமணம் ஆகி ஒருமாதத்தில் 4 மாதம் கர்ப்பம்! இளம் பெண் கூறிய திடுக்கிடும் தகவல்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும், சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரங்களிலையே சுமதிக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமதியை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார் சுமதியின் கணவர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர்கள் சுமதி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்னனர். திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த கணவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்னனர்.
இதுகுறித்து சுமதியிடம் விசாரித்தபோது பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருமணத்திற்கு முன்பு சுமதி சிவகங்கையில் உள்ள நர்ஸிங் கல்லூரி ஒன்றில் படித்தபோது , அதிக மதிப்பெண்கள் போடுவதாக கூறி அந்த கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜ் சுமதியை பலமுறை கற்பழித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கல்லூரி தாளாளரை கைது செய்துள்னனர். மேலும், இதுபோன்று வேறு பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.