பிரிந்து சென்ற பொண்டாட்டி, பிள்ளைகளை பார்க்க நடந்தே சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்...! நடுவழியில் மீட்ட போலீசார்.!

பிரிந்து சென்ற பொண்டாட்டி, பிள்ளைகளை பார்க்க நடந்தே சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்...! நடுவழியில் மீட்ட போலீசார்.!


man-walked-to-meet-his-wife-and-children

தன்னை பிரிந்து சென்ற தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காண தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கமலாபுரத்தினை பகுதியை சேர்ந்தவர் சண்முக ராஜ். இவரது மனைவி முப்படாதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சண்முக ராஜ்க்கு தீடீரென மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டதால் சண்முகராஜ் வேலைக்கு செல்லவில்லை.

இதனால் கணவனுடன் சண்டைபோட்டுவிட்டு அவரது மனைவி இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தென்காசியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க, சட்டை கூட அணியாமல் டிபன் பாக்சில் சாப்பாட்டை கட்டிக்கொண்டு நடந்தே சென்றுள்ளார் சண்முகராஜ்.

கோவில்பட்டி சாத்தூர் சாலை அருகே சண்முகராஜ் சட்டை இல்லாமல் நடந்து செல்வதை பார்த்த அந்த பகுதிமக்கள் அவரை விசாரிக்க முற்பட்டுள்ளனர். மக்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்த சண்முகராஜ் வேகமாக ஓடியுள்ளார் இதில் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் போலீசாருக்கு தெரியவர சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் சண்முகராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.