புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.!! எமனாக மாறிய மச்சான்.!!
மதுரை அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் உறவினர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
மதுரை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருக்கிறான். ராமர் ட்ரை சைக்கிள் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் சித்தி மகன் விஜய்(28). கோவையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். இவர்கள் இருவரது வீடும் அருகருகே அமைந்திருக்கிறது. இந்நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக மதுரை வந்த விஜய், ராமரின் மகனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தலையில் கல்லை போட்டு கொடூர கொலை
இந்த சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகன் வீட்டிற்கு வர தாமதமானதால் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார் ராமர். அப்போது விஜய், ராமரின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராமர் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனாலும் விஜய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய் பாலியல் தொல்லை செய்ததை தொடர்ந்து ராமரின் மகன் அழுது கொண்டே இருந்திருக்கிறார். இதனைக் கண்டு மேலும் கோபமடைந்த ராமர் அருகில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்று படுத்துக் கொண்டிருந்த விஜயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: முன்விரோதம்.! பழிதீர்க்க நள்ளிரவில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்.! மதுரையில் பயங்கரம்!!
தந்தை கைது
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட ராமரை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "நம்மள சேர்ந்து வாழ விட மாட்டாங்க.." கள்ளக்காதலுக்கு பலியான கணவன்.!! 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது