BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முன்விரோதம்.! பழிதீர்க்க நள்ளிரவில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்.! மதுரையில் பயங்கரம்!!
முன்விரோதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசித்து வந்தவர் முத்தையா. இவரது மகன் விக்னேஸ்வரன். கல்லூரியில் படித்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
தீபாவளியன்று மீண்டும் மோதல்
தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி மோதல் நிலவி வந்த நிலையில், மீண்டும் கடந்த அக்டோபர் 3, தீபாவளியன்று இருவருக்குமிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோபமடைந்த விக்னேஸ்வரன் நள்ளிரவில் மதன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதில் அவர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாகியுள்ளது.

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
ஆனால் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர்தப்பினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மதன் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "நம்மள சேர்ந்து வாழ விட மாட்டாங்க.." கள்ளக்காதலுக்கு பலியான கணவன்.!! 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது
இதையும் படிங்க: காதலிப்பதாக நாடகம்... 15 வயது சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.!!