தமிழகம்

துணை நடிகைகளை அழைத்து வருகிறேன்! காத்திருந்த இளைஞருக்கு கடைசில் நடந்த அதிர்ச்சி!

Summary:

Man lost auto in chennai

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜாத்விக். ஓலா நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவருக்கு நேற்று சென்னையில் உள்ள கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து சாலி கிராமம் செல்வதற்கு துறை என்பவர் ஜாத்விக்கின் ஆட்டோவை புக் செய்துள்ளார்.

பயணத்தின் இடையில் துறை ஜாத்விக் உடன் பேச்சு கெடுத்துள்ளார். அதில் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு சினிமா துறையில் பலரை தெரியும் எனவும் கூறியுள்ளார். சிறு வயதில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஜாத்விக் துறையின் பேச்சால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ஜாத்விக் துறையிடம் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தர முடியுமா என கேட்க துறையும் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு பல துணை நடிகைகளை தெரியும் எனவும் தான் எப்போது கூப்பிட்டாலும் அவர்கள் வருவார்கள் எனவும் துறை ஜாதவிக்கிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோ சாலி கிராமத்தை அடைந்ததும் துறை ஜாதவிக்கிடம் அவரை ஒரு கடையில் நிற்குமாறும், தான் ஆட்டோவில் சென்று சில துணை நடிகைகளை அழைத்து வருவதாகவும் கூறிவிட்டு ஆட்டோவை எடுத்து சென்றுள்ளார். துறை மீண்டும் வருவார் என நம்பி ஆட்டோவை கொடுத்த ஜாதவிர்க்கு சிறிது நேரத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

சிறிது நேரத்தில் வருவதாக கூறிய துறை நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஜாதவிக்கிற்கு தான் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement