என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
இளம்பெண்ணை மணந்த முதியவர்!! திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட கொடூரம்!!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் தர்மன் இவரின் வயது 47, இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விஜயசாந்தி என்ற 24 வயது நிரம்பிய இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு கைக்குழந்தை இருந்துள்ளது.
தர்மனின் மனைவி விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததால், தர்மனுக்கு சந்தேகம் ஏற்பட்டு மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தர்மனின் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த தர்மன், மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரும் சண்டைபோட்டு கொண்டனர். பின்னர் தோட்டத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவியின் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.
அங்கு நடந்த கொடூர சம்பவத்தால் தர்மனின் மனைவி விஜயசாந்தி சம்பவ இடத்தியிலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.