"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
வேறொருவருடன் உல்லாசமாய் இருந்த காதலி!. காதலனின் அதிர்ச்சி முடிவு!.
ஒசூரின் பெலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சூடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இதையடுத்து பாகலூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நபரோடு மஞ்சுளாவிற்கு நெருக்கம் ஏற்பட்டதால், மஞ்சுளாராஜேசுடனான கள்ளக்காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
தனது காதலி தன்னை விட்டு வேறொரு ஆணுடன் சுற்றுவதை அறிந்த ராஜேஷ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் அங்கிருக்கும் ஒரு தைல மரத்தோட்டத்தில் சுரேஷும், மஞ்சுளாவும் தனியாக இருப்பது ராஜேசுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் கையில் கத்தியுடன் ராஜா அங்கு சென்றுள்ளார். அதை பார்த்த சுரேஷ் அதைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மஞ்சுளாவை பிடித்து கத்தியால் அவரை பல முறை குத்தியுள்ளார் ராஜேஷ்.
மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ராஜேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.