13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
காப்புக்காட்டில் முணுகல் சத்தம்.. இரண்டாம் அட்டெம்டுக்கு 'நோ' சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் கதறக்கதற நடந்த பயங்கரம்..!!
"நான் கூப்பிட்டா வரமாட்டியா" என 2-வது முறை உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
தர்மபுரியில் உள்ள சித்தேரியை அடுத்த வெள்ளம்பள்ளியை சேர்ந்த பார்வதி. இவர் ஆண்டியப்பன் என்பவரை 12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்தநிலையில், கடந்த 9 வருடங்களுக்கு முன்னதாக கணவர் இறந்ததால் குழந்தைகளோடு கீரைப்பட்டியில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக சக்திவேல் என்பவருடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சக்திவேலின் முதல் மனைவி 15 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாததால் பார்வதியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல கீழானூர் காப்புகாட்டுக்குச் சென்ற இருவரும் தனிமையில் இருந்தபோது, சக்திவேல் மீண்டும் இரண்டாவது முறை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
அதற்கு பார்வதி மறுப்பு தெரிவிக்கவே, வேறொரு நபருடன் அவர் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு சக்திவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றவே, சக்திவேல் தான் முன்பே மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை வைத்து பார்வதியின் முகத்தை அடித்து சிதைத்து கொடூரமாக கொலை செய்தார். மேலும் அவர் அணிந்திருந்த தோடு, வெள்ளி கொலுசு, செயின் உள்ளிட்டவற்றையும் பறித்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்று பதுங்கியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து கீழானூர் காட்டுபகுதியில் 32 வயதுடைய பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்தது சக்திவேல் என்பது உறுதியானதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.