தமிழகம்

அண்ணன் வீட்டில் இல்லாதபோது அண்ணியிடம் கொழுந்தன் செய்த காரியம்!! திருவண்ணாமலையில் நடந்த பரபரப்பு சம்பவம்..

Summary:

தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற கொழுந்தனாரை, அண்ணி வெட்டிக் கொன்றதாக கூறப்படும்

தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற கொழுந்தனாரை, அண்ணி வெட்டிக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பராசக்தி. செல்வம் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். லாரி ஓட்டுநர் என்பதால் செல்வம் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதனால் அவரது மனைவி பராசக்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட செல்வத்தின் தம்பி ராஜா, தனது அண்ணியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜா, தனது அண்ணி பராசகித்தியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும், அதனால் ராஜாவை பராசக்தி அரிவாளால் வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பராசக்தி மற்றும் ராஜாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement