தமிழகம்

அடுத்தவர் மனைவியை மயக்கிய கிளி ஜோசியர்!. கணவனின் விபரீத செயல்!.

Summary:

man killed astrologer for illegal affairs

திருப்பூர் மங்கலம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குமரன் ரோடு அருகே சாலையோரத்தில் அமர்ந்து, கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அந்த கிளி ஜோசியர் பெண்களை வசியம் செய்து வந்ததாக கூறப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலை செய்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை நடந்த இடத்தில் கொலையாளி வீசிச்சென்ற துண்டு சீட்டில் கிளி ஜோசியர் பற்றிய தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. அந்த துண்டு சீட்டில், திருப்பூர் குமரன் பார்க் ரோட்டில் கிளிஜோதிடம் பார்க்கும் இவன் திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவன். பெயர் ஜே.ரமேஷ் என்கிற குமார். இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு வெளியில் அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்ணி வைத்து, தீயசக்தி சாத்தானை வைத்து, பிடித்து பாலியல் தொழில் நடத்தி வருகிறான்.

இவனுக்கு பின்னால் சில அரசியல்வாதிகள், சில முக்கிய பிரமுகர்கள், சில பொலிஸ் அதிகாரிகள், சில நிறுவன முதலாளிகள் மற்றும் அதன் கும்பலை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனக்கும் போயம்பாளையம் ராஜாநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 9 வருடங்களாக பழக்கம் இருந்து வந்தது. எங்கள் இருவருக்கும் பிறந்த ஒரு மகன் உள்ளான்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து அவளை என்னிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டான்.

கடந்த 2 வருடம் 7 மாதங்களாக ரமேஷின் பிடியில் அவள் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறாள். இதனால் அந்த பெண்ணை மீட்டு, கூட்டிச்சென்றவர்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் முறையான விசாரணை செய்து கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் தொழில் செய்ததை கண்டுபிடித்தது போல இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இப்படிக்கு  பாதிக்கப்பட்டவன் என எழுதியுள்ளது.
 


Advertisement