தலைக்கேறிய மதுபோதை... 11 ஆம் வகுப்பு மாணவியை பெண் கேட்டு ரகளை செய்த ரவுடி.! தட்டிக்கேட்ட பெண்.! பரிதாபமாக போன உயிர்.!

தலைக்கேறிய மதுபோதை... 11 ஆம் வகுப்பு மாணவியை பெண் கேட்டு ரகளை செய்த ரவுடி.! தட்டிக்கேட்ட பெண்.! பரிதாபமாக போன உயிர்.!


man kille dold lady in drunk

சென்னையை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர் விக்னேஷ்.  இவர் மீது 12 திருட்டு வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளன. விக்னேஷ்க்கு அதே பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது காதல் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் வந்த விக்னேஷ், அந்த மாணவியின் வீட்டின் எதிரே நின்று அந்த மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி ரகளை செய்துள்ளார்.

மேலும், அருகில் உள்ள வீட்டின் மீது கற்களையும் வீசியுள்ளார். இதனை தட்டி கேட்க வந்த பக்கத்துக்கு வீட்டு பென்பனை விக்னேஷ் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனைப்பார்த்து ஓடிவந்த அப்பெண்ணின் தாய் வெள்ளத்தா விக்னேஷிடம்  எதுக்குப்பா இப்படி குடித்து விட்டு தகராறு செய்கிறாய்? எனக்கேட்டுள்ளார்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த விக்னேஷ், கையில் இருந்த பட்டா கத்தியால் மூதாட்டி வெள்ளத்தாவின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வெள்ளத்தா, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளத்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெள்ளத்தா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய விக்னேஷை கைது செய்தனர்.