தமிழகம்

நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்!. நண்பன் எச்சரித்தும் மேலும் தொடர்ந்து ஏற்பட்ட உறவு!. இறுதியில் முடிவு!.

Summary:

நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்!. நண்பன் எச்சரித்தும் மேலும் தொடர்ந்து ஏற்பட்ட உறவு!. இறுதியில் முடிவு!.

தமிழகத்தில், கொலை கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற சம்பவங்கள் ஒரு புறம் நடந்தால், மற்றொரு பக்கம் கள்ளக்காதல் மோகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்த சூழ்நிலையில், விழுப்புரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை கொன்று அவரை புதைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வினோத், ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவருக்கு திருமணமாகவில்லை. மேலும், ஆயந்தூர் அருகே உள்ள ஆ.கூடலூர் என்ற கிராமத்தில் அருள் என்பவர் இவருடைய மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார்.

 இந்த நிலையில், வினோத் அடிக்கடி ஆட்டோ சவாரிக்கு ஆ.கூடலூருக்கு செல்லும் போது அவருக்கும், அருளுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒருநாள் அருளின் மனைவி அனிதாவை வினோத் சந்தித்தார். பின்பு அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

 இதனால், இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவரம் அருளுக்கு தெரிந்து, அவர் மனைவி அனிதாவை கண்டித்ததோடு, வினோத்திடமும் எனது மனைவியிடம் நீ பேசக்கூடாது, அவளுடன் உள்ள தொடர்பை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

அருள் எச்சரித்த பின்பும் அதனை பொருட்படுத்தாத வினோத், அனிதாவுடன் வைத்திருந்த தொடர்பை தொடர்ந்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள் வினோத்தை கொலை செய்ய முடிவு செய்து, தனது நண்பர்களிடம் இந்த சம்பவம் குறித்து கூறியதும், அவர்களும் வினோத்தை கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர். 

மேலும், கடந்த 15-ந் தேதி அருள் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து வினோத்குமாரை ஏமாற்றி அருளவாடியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு  அழைத்துச் சென்றனர். அங்கு அனைவரும் மது அருந்தினர். இதனால் போதையடைந்த வினோத்தை, அருளும் அவரது நண்பர்களும் உருட்டுக்கட்டையால் அவரை அடித்ததால், வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 பின்னர் அவர்கள் அங்குள்ள ஆற்றில் வினோத்தின் உடலை புதைத்து விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் சவாரிக்கு சென்ற தனது மகன் வினோத் வீடு திரும்பாததால் அவரது தந்தை, பல இடங்களில் தேடிப்பார்த்தும் வினோத்தை கண்டுபிடிக்க முடியாததால், காணை போலீசில் குமார் புகார் செய்தார். 

வினோத்தை தேடி வந்த போலீசார், நேற்று இரவு வினோத்தின் நண்பர்களான அருள் உள்பட சிலரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தத்தில், வினோத்தை கொலை செய்து புதைத்ததை அருள் கூறினார். மேலும், வினோத்தின் உடல் புதைத்து வைக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் அருள் அடையாளம் காட்டினார்.இந்த சம்பவம் தொடர்பாக அருள் உள்பட 7 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement