தமிழகம்

கள்ளக்காதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்.. உண்மை தெரிந்து கொதித்து போன பெண்மணி.!

Summary:

கள்ளக்காதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்.. உண்மை தெரிந்து கொதித்து போன பெண்மணி.!

அம்பத்தூரில் கள்ளக்காதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்திற்கு கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் கே.கே.சாலையில் வசித்து வரும் பெண்ணுக்கு 7-ஆம் வகுப்பு படித்து வரும் மகளும், 6-ஆம் வகுப்பு படித்துவரும் மகனும் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் குடும்பத்தை விட்டு சென்ற நிலையில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார்.

தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் அந்தப் பெண்ணுக்கு அம்பத்தூர், ஆசிரியர் காலனி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிஸ்வஜித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கள்ளக் காதலியோடு தொடர்பு வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவரது 13 வயது மகளையும் மிரட்டி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான் இந்த காமுகன்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயாருக்கு தெரியவந்ததும் தனது மகளையும், மகனையும் அழைத்துக் கொண்டு பிஸ்வஜித்தை விட்டு பட்டாபிராம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பிஸ்வஜித் அவர்களின் வீட்டிற்கு சென்று 13 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்தது மட்டுமல்லாமல் அவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனை அறிந்து கொதித்துப் போன அந்தப் பெண்மணி அம்பத்தூர் அரசு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்மணி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஸ்வஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி பிசுவஜித் சிறையில் அடைக்கப்பட்டார்.


Advertisement