தமிழகம்

ஒரு மனுஷனுக்கு சாவு இப்படியா வரணும்!! மதுபோதையில் தண்ணீர் என நினைத்து துணி வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை குடித்த நபர் உயிரிழப்பு..

Summary:

மதுபோதையில் தண்ணீர் என நினைத்து துணியை வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை மதுவுடன் க

மதுபோதையில் தண்ணீர் என நினைத்து துணியை வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை மதுவுடன் கலந்து குடித்தவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் காளி (63). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்துவரும் காளி, நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு நல்ல போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்தவர் மீண்டும் மதுபாட்டிலை எடுத்து குடிக்க முற்பட்டுள்ளார்.

அப்போது மதுவில் தண்ணீர் கலப்பதற்காக தண்ணீரை தேடிய அவர், மதுபோதையில் தண்ணீர் என நினைத்து அங்கிருந்த துணியை வெளுக்கப் பயன்படும் பிளீச்சிங் ரசாயனத்தை எடுத்து மதுவுடன் கலந்து குடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement