இயந்திரத்தில் சிக்கி கழுத்தை இறுக்கிய துணி! பதறவைக்கும் CCTV காட்சிகள்!
இயந்திரத்தில் சிக்கி கழுத்தை இறுக்கிய துணி! பதறவைக்கும் CCTV காட்சிகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் பிரிவு அருகே உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, பணி முடிந்து நிலையில், இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கட்டையை அரவை இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார் ஏழுமலை.
ஏழுமலை சுத்தம் செய்துகொண்டிருந்த பொது அவரது கழுத்தில் கட்டியிருந்த துணி எதிர்பாராத விதமாக, அரவை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டது. இயந்திரத்தில் சிக்கிய துணி ஏழுமலையின் கழுத்தை வேகமாக சுற்றியுள்ளது. இதில் மூச்சு திணறி ஏழுமலை கீழே விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு, கழுத்தில் சிக்கிய துணியை கத்தி மூலம் அகற்ற முயன்றுள்ளனர். ஆனால், துணி ஏழுமலையின் கழுத்தை இருக பற்றியிருந்ததால் துணியை அவர்களால் அகற்ற முடியவில்லை. இதற்கிடையில் கழுத்து இறுக்கி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. ஏழுமலையின் சிறு கவன குறைவால் அவர் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.