புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஒரு வருடத்தில் கசந்த வாழ்க்கை... உயிரை பறித்த குடும்ப சண்டை.!! கணவன் தற்கொலை.!!
திருச்சி அருகே குடும்பத்த தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக திருவெரும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வருடத்திற்கு முன் திருமணம்
திருச்சி நகரில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கீழக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுத்து. இவருக்கு கடந்த வருடம் அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐயோ பரிதாபம்... சோறு வடித்ததால் பறிப்போன உயிர்.!! பலியான 16 வயது சிறுமி.!!
மன உளைச்சலில் தற்கொலை
இந்நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி பாலமுத்து மற்றும் அபிநயா இடையே மீண்டும் பிரச்சனை வெடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாலமுத்து ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடலை கைப்பற்றி விசாரணை
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய பாலமுத்துவின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே வருடத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "எங்க புள்ள மேல கை வைப்பியா.." பூட்டி வைத்து ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்.!! காவல்துறை குவிப்பு.!!