தமிழகம்

போனில் பேச மறுத்த நிச்சயித்த பெண்! வீடியோ காலில் லைவாக தற்கொலை செய்த வக்கீல்!

Summary:

Man commit suicide for his girl refused to speak

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம். விவசாயியான கோதண்டத்தின் மகன் சுரேஷ் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.

இவர் சட்ட கல்லூரியில் படிக்கும்போது, அதே கல்லூரியில் படித்த கடலூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். படிப்பு முடிந்து வேலைக்கு சென்றுவிட நிலையில் தங்கள் காதலை கூறி இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க விரைவில் இருவருக்கும் திருமணம் நடப்பதாய் இருந்தது.

இந்நிலையில் திருமண அழைப்பிதழை தேர்வு செய்வதற்காக சுரேஷின் காதலி பாண்டிச்சேரி வந்துள்ளார். சுரேஷ் - அவரது காதலி இருவரும் சேர்ந்து அழைப்பிதழை தேர்வு செய்துவிட்டு பல இடங்களுக்கு சென்று சுற்றிவிட்டு இரவு பஸ் ஏறி அந்த பெண் கடலூர் சென்றுள்ளார்.

இதனிடையே பலமுறை தனது காதலிக்கு சுரேஷ் போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. இறுதியாக 11 மணியளவில் போனை எடுத்தபோது வீடியோ கால் செய்த சுரேஷ், நீ என்னுடன் பேச மறுப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி விட்டு, நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூக்கு போட்டுள்ளார்.

சுரேஷ் ஏதோ விளையாட்டுக்கு கூறுவதாக நினைத்துள்ளார் காதலி, இருப்பினும் சந்தேகம் எழுந்ததால் அந்த பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து சுரேஷ் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அங்கு சுரேஷின் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் சுரேஷ் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். சுரேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது வருங்கால மனைவி பேசவில்லை என்பதால்தான் சுரேஷ் தூக்கு போட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்துவருகின்றனர் .


Advertisement