BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என் ஆசைக்கு இணங்கு.! இல்லைனா.. அந்த வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய காவலாளி!!
கோவை வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியில் வசித்து வந்தவர் ரங்கசாமி. 49 வயது நிறைந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு அங்கு வேலை பார்த்துவந்த 47 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண்ணிற்கு மிரட்டல்
இந்நிலையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை ரங்கசாமி ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை காட்டி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

கைது செய்து சிறையில் அடைப்பு
இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரங்கசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பின் சிறையில் இருந்து வெளியேறிய ரங்கசாமி மீண்டும் அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்க அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் மீண்டும் போலீசில் புகார் அளித்த நிலையில் ரங்கசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப்பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அரியலூரில் பரபரப்பு சம்பவம்.. விசிக பிரமுகரின் மகன் அதிர்ச்சி செயல்.!
இதையும் படிங்க: கால்பந்து விளையாடியவாறு பறிபோன உயிர்; ஈரோட்டில் நண்பர்களின் கண்முன் நடந்த சோகம்.!