கால்பந்து விளையாடியவாறு பறிபோன உயிர்; ஈரோட்டில் நண்பர்களின் கண்முன் நடந்த சோகம்.!erode football Player Died 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 45). பத்திரம் எழுதும் பணியில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணி, வீட்டருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் தினமும் கால்பந்து விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. 

கால்பந்து விளையாடும்போது மயக்கம்

இந்நிலையில், இன்று காலை நேரத்தில் வழக்கம்போல மைதானத்திற்கு சென்று விளையாடிய நபர், திடீரென மயங்கி விழுந்து இருக்கிறார். இதனால் பதறிப்போன சக வீரர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இதையும் படிங்க: அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த ஐடி ஊழியர் இரயில் மோதி பலி; சென்னையில் சோகம்.!

பரிதாப பலி

பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், வரும் வழியிலேயே உயிரிழந்தது மருத்துவர்கள் சோதனையில் உறுதியானது. இந்த தகவலை அறிந்த அவரின் நண்பர்கள் மற்றும் பெற்றோர் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.

இதையும் படிங்க: பெண்கள் வீட்டை நோட்டமிட்ட இளைஞர்; சந்தேகத்தில் அடித்து நொறுக்கியதில் மயங்கி பலி.. சென்னையில் அதிர்ச்சி.!