திக்... திக்... ஆம்பூர் அருகே காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா... வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர் கைது.!

திக்... திக்... ஆம்பூர் அருகே காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா... வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர் கைது.!



man-arrested-for-overturning-cauvery-express-train-near

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை தவில் கம் என்ற நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது  சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநில மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காவிரி விரைவு ரயில் வீர குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரயில்வே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டு இருப்பதை கவனித்த எஞ்சின் ஓட்டுநர் ரயிலை மெதுவாக இயக்கினார் எனினும் ரயிலின் சக்கரங்கள் மோதி கற்கள் உடைந்ததால் பயங்கர சத்தம் எழுந்தது. இந்த சத்தத்தால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

tamilnadu

இதனைத் தொடர்ந்து பச்சை குப்பம் ரயில் நிலையத்தில் ஓட்டுனர் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ரயில்வே நிலைய காவல் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று ரயிலை தவிர்க்க சதி நடந்து இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் சென்னையில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும் மோப்ப நாய்களுடன் வந்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சேலம் ரயில்வே உட்கோட்ட டிஎஸ்பி  பெரியசாமி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

இவர்களின் விசாரணையை தொடர்ந்து தண்டவாளத்தில் கற்களை வைத்த  நபரை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் அந்த நபர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும்  அவரது பெயர் மங்களப் பிரசாத் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறையின் விசாரணையின் மூலம் உறுதியாகி இருக்கிறது  இதனைத் தொடர்ந்து அந்த நபர் வேலூர் பாகாயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.