வேலைக்குச்சென்ற தாய்.. வீட்டிலிருந்த 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர்.! அதிர்ச்சி சம்பவம்.!

வேலைக்குச்சென்ற தாய்.. வீட்டிலிருந்த 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர்.! அதிர்ச்சி சம்பவம்.!


man abused young girl

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 33 வயது பெண், தன் கணவரை பிரிந்து கடந்த 3 வருடுங்கலாக மகேஷ்குமார் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த 7 வயதான பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்தநிலையில்,  நேற்று முன்தினம் அந்த பெண் வேலைக்கு சென்றபின்னர் வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு மகேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த அந்த பெண், தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.