தமிழகம்

கொரோனாவால் சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மால்களின் தற்போதைய நிலை!

Summary:

Malls opened in chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் நலன் கருதி பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கொரோனா  காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மால்கள் திறக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக சென்னையில் உள்ள பெரும்பாலான மால்களில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். ஆனால் கொரோனா காரணமாக தற்போது மால்களில் மக்கள் கூட்டம் சிறிதளவே காணப்படுகிறது. மால்களிலும் உள்ளே நுழையும் போது, சானிடைசரால் கைகளை கழுவப்பட்டு, உடலின் வெப்பநிலை சோதனை செய்யும் கருவியால் சோதனை செய்த பிறகே பொதுமக்கள் மால்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை வடபழனியில் உள்ள பிரபல மால் ஒன்றில், இன்று கூட்டம் சிறிதளவே காணப்படுகிறது. மால்களில் உள்ள கடைகளும் வெறிச்சோடிகாணப்படுகின்றது. 


Advertisement