இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் குராயூரைச் சேர்ந்த கார்த்திக், விக்னேஸ்வரன் என்ற சகோதரர்கள் இருவரும் திருமங்கலம் நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனம் மூலக்கரை அருகே வரும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது.
அதில் சகோதரர்கள் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அதில் விக்னேஷ்வரனின் தலை மீது மற்றொரு வாகனம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.